Pages

Sunday, 31 July 2011

படித்ததில் பிடித்தது... ஆகஸ்டு-15, இந்திய சுதந்திர நாளின் இரகசியம்.


இந்தியாவின் சட்டமியற்றும் உறுப்பினர்கள் விவாதிப்பதற்காக கட்டப்பட்டிருந்த அந்த, அழகிய சபை இதற்கு முன் இப்படியொரு நிகழ்ச்சியை கண்டிராது.

அங்கிருந்த லூயி மவுண்ட்பேட்டன், இந்திய மற்றும் உலக பத்திரிகையாளர்களுக்கு, கையில் குறிப்பேதும் இல்லாமல் உறுதியாகவும், தெளிவாகவும், அவர் பற்றி விஷம் கக்கும் விமர்சகர்கள் கூட அஞ்சும் வகையில் சில விவரங்களை தெரிவித்துக்கொண்டிருந்தார்.

வராற்றின் மிக முக்கிய, பிறப்பு சான்றுகளின் ஒன்றான, சிக்கல் மிகுந்த (இந்திய விடுதலை) திட்டம் பற்றியும், புவிக்கோளில் உள்ள மூன்றாம் உலக மக்களுக்கு முன்னோடியான ஒரு நாடாளமன்றம் அமையப்போவது பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

பிரிட்டனின், இந்திய பேரரசு வரலாற்றியல் இரண்டாவது முறையாக ஒரு வைஸிராய் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தினார், இதுவே கடசியானதாகவும் இருக்கும்.

யு.எஸ்.எஸ்.ஆர். (சோவியத் சோசலிச குடியரசு) யு.எஸ் (அமெரிக்க  ஐக்கியநாடுகள்) சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முந்நூறுக்கும் அதிகமான முன்னணி பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் இந்திய பத்திரிக்கைகளின் பிரதிநிதிகள் அங்கே கலந்திருந்தார்கள்.

பிராந்திய, சமயம் சார்ந்த, மொழிசார்ந்த பத்திரிக்கைகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். இங்கே குவிந்த அணைவரும் வைஸ்ராயின் வார்த்தைகளை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

மவுண்ட்பேட்டனை பொருத்தவரை இந்த செய்தியாளர்கள் கூட்டம் புனிதமானது. தனது குறிப்பிடத்தக்க ஆற்றலை காட்டுவதற்க்கான கடைசி வாய்ப்பு. சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் ஒற்றை மனிதராக சாத்தியமில்லாததை சாதித்தார். இந்திய தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார், ஒரு ஒப்பந்தத்திற்கு அடிப்படை அமைத்தார். இந்தியத்  தலைவர்கள் ஒப்பந்தத்தை ஏற்கும்படி செய்தார். லண்டனில் உள்ள அரசிடமும் எதிர்கட்சியிடமும் தனது திட்டத்துக்கு முளுமனதுடனான ஆதரவை பெற்றார், அதற்கான பாதையில் ஏற்படுத்தப்பட்ட பள்ளங்களை சுற்றி, தனது சாமர்த்தியத்தாலும், ஓரளவு இருந்த அதிர்ஷ்ட்டத்தாலும் கரைகளை அமைத்தார். கடைசி நடவடிக்கையால் சர்ச்சில் என்ற வயதான சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து அதன் நகங்களை மடக்கிக் கொள்ளச்செய்தார். அவரது ஒப்புதலையும் பெற்றார்.

விண்ணதிரும் கரவொலியுடன் மவுண்ட்பேட்டன் தனது பேச்சை முடித்தார், பிறகு கேள்விகள் கேட்க அனுமதித்தார். அதை செய்ய அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. பிற்காலத்தில் இப்படி நினைவு கூர்ந்தார். நான் அப்படி அங்கே இருந்தேன், ஒவ்வொரு கணத்திலும் நான் ஒருவன் மட்டுமே முளுமையாக நிறைத்திருந்தேன்.

விரல் நுனியில் அனைத்து விவரங்களையும் கொண்டிருந்த ஒரு மனிதரை முதன் முறையாக பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர்.

அலை போல் எழுந்து நின்ற பல கேள்விகளுக்கிடையில் திடீரென்று கசிவு போல ஒரு கேள்வி வெளிப்பட்டது. பெயர் தெரியாத ஒரு இந்திய பத்திரிக்கையளரின் குரல் அந்த சபை முழுவதும் நிறைந்திருந்தது. பதிலுக்காக காத்திருந்த கடைசி கேள்வி அவருடையது.

கடந்த ஆறு மதங்களுக்கும் முன்னர் அவரிடம் கொடுக்கப்பட்ட குறுக்கெழுத்து போட்டிக்கான கட்டங்களில் மவுண்ட்பேட்டன் நிரப்பவேண்டிய கடைசி கட்டமாகும் அது.

(படத்தில்: மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு மற்றும் எட்வினா மவுண்ட்பேட்டன் – மகிழ்ச்சியான ஒரு பொழுதில்)


“சார், நீங்கள், திட்டமிட்ட அதிகார மாற்றத்திற்கு வேகம் மிகவும் தேவை என்பதை அணைவரும் ஒப்புக்கொண்டார்கள் என்றால்..., “நிச்சயமாக அதற்கான ஒரு தேதி உங்கள் மனத்தில் இருக்குமல்லவா...? என்று அந்த குரல் கேட்டது.

“ஆம்... நிச்சயமாக மவுண்ட்பேட்டன் பதிலளித்தார்.

ஒரு தேதியை “முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் அது எந்த தேதி..? அந்த இந்திய நிருபர் வலியுறுத்திக் கேட்டார்.

இந்த கேள்வியை கேட்ட வைஸ்ராயின் மனம் விரைவாக பல கணக்குகளைப் போட்டது. உண்மையில் அவர் இந்தியாவுக்கு அதிகார மாற்றத்தை செய்யும் தேதியை முடிவு செய்யவில்லை... அனால் விரைவில் இருக்கும் என்று மட்டும் நினைத்தார்.

பத்திரிக்கையாளர்கள் நிரம்பி வழிந்த அந்த மண்டபத்தை அவர் கூர்ந்து பார்த்தார், எல்லோர் முகங்களும் அவரை நோக்கி திரும்பியிருந்தன, பலத்த எதிர்பார்ப்புடன் நிலவிய அமைதியை, அந்த மண்டபத்தில் பொருத்தப்பட்டு அவர்களின் தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறிகளின் மரத்தாலான இறக்கைகளிளிருந்து விர்ரெனவரும் சத்தம் தான் கலைத்துக் கொண்டிருந்தது.

“ஆம்... அதிகார மாற்றத்திற்கு நான் ஒரு தேதியை  தெரிவு செய்திருக்கிறேன் என்று அவர் பதிலளித்தார்.



இந்த வார்த்தையை சொல்லும் போதே நூற்பாலையில் சர்க்கரத்தை சுற்றி எண்ணற்ற நூலிழைகள் ஓடுவது போல, மவுண்ட்பேட்டனின் மனதில் வாய்ப்பான பல தேதிகள் ஓட்டிக்கொண்டிருந்தன... செப்டம்பர் துவக்கத்திலா..? செப்டம்பர் மத்தியிலா...? ஆகஸ்டு மத்தியிலா..? மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென சக்கரம் நின்றது, சிறு பந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது. மவுண்ட்பேட்டனின் கணநேர முடிவுக்கு, இது மிகவும் பொருத்தமாக இருந்தது.



அவரது வாழ்கையில் மிகபெரிய வெற்றி பெற்ற அந்த நாள், அவரது நினைவில் பசுமையாக இருந்தது. பர்மாவின் காடுகள் வழியே அவர் மேற்கொண்ட நெடிய போரின் (இரண்டாம் உலகப்போர்) முடிவில் “ஜப்பான் பேரரசு நிபந்தனையின்றி சரணடைந்தது தான் அந்த நாள். (ஆகஸ்டு 15, 1945).

ஜப்பான் சரனாகதியயின் இரண்டாவது ஆண்டு என்பதைவிட புதிய ஜனநாயக ஆசியாவின் பிறப்புக்கான தேதியாக இது இருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்..?
திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கல் அவர் குரல் கம்மியது. பர்மா காடுகளில் வெற்றியாளராக இருந்து, இந்தியாவின் விடுவிப்பாளராக வந்த அவர் அறிவித்தார்.

“இறுதியாக இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரமாற்றம் 15 ஆகஸ்ட் 1947-ல் நடக்கும் இந்திய சுதந்திரத்திற்கான தேதி அறிவிக்க தன்னெழுச்சியாக லூயி மவுண்ட்பேட்டன் எடுத்த முடிவு. ஒரு குண்டு வெடிப்புபோல் இருந்தது, பிரிட்டனில் இந்தியா விசியத்தில் மவுண்ட்பேட்டன் திடீரெண்டு இவ்வளவு விரைவாக திரைச்சீலைய இழுத்துவிடத் தயாராவாரென்று (இங்கிலாந்து) மக்களவை தால்வாரங்கழளிலோ, டவுனிங் தெருவிலோ, பக்கிங்காம் அரண்மனையிலோ கூட ஒருவரும் ஐயுரவில்லை.

டில்லியில் வைஸ்ராயின் மிக நெருங்கிய ஊழியர்களுக்குக் கூட அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. யாருடன் அவர் பலமணி நேரம் செலவழித்தாரோ அந்த இந்தியத் தலைவர்களுக்கு கூட அவர் இவளவு வேகமாக செயல்படுவார் என்பதற்கான குறிப்பு கிடைக்கவில்லை.   

    1947 ஜனவரி முதல் நாளன்று, லண்டன் நகரத்தில் உள்ள டவுனிங் தெருவில் இருக்கும் பத்தாம் எண் வீட்டில் (பிரதமரின் அதிகாரப்பூர்வமான இல்லம்) சந்தித்துக்கொண்ட இங்கிலாந்து தேசத்திற்கான, ஆசிய பிராந்திய கடற்படை தளபதி லூயி மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கும், இங்கிலாந்தின் பிரதமர் கிளமென்ட் அட்லிக்கும் நடந்த நீன்ட சந்திப்பிற்கு பின்னர், சிக்கல் மிகுந்த இந்தியாவுக்கு அதிகார மற்றம் செய்யும் பொறுப்பை மவுண்ட்பேட்டன் ஏற்றுக்கொள்கிறார்.

பின்னர், இந்தியாவுக்கு வரும் லூயி மவுண்ட்பேட்டன் ஜுன் மாதம் 5,ம்.தேதி டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய விடுதலை நாள் முடிவு செய்யப்பட்ட சம்பவம் பற்றி “நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்களான டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் ஆகியோர் எழுதியுள்ளார்கள்.


தொகுத்தளித்தவர்: சிவசுப்ரமணியன்

3 comments:

  1. அரிய தகவல்களுடன் நல்ல பதிவு. வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  2. இந்திய சுதந்திர தேதியான ஆகஸ்ட் 15-ஐ கணநேரத்தில் முடிவு செய்தது மவுண்ட்பேட்டனாக இருந்தாலும் அதற்கு கரணம் முந்நூறுக்கும் அதிகமான முன்னணி பத்திரிக்கை நிருபர்களுக்கு மத்தியில் ஒலித்த பெயர் தெரியாத ஒரு இந்திய பத்திரிக்கையளரின் குரல்தான்.
    இந்திய சுதந்திர வரலாற்றில் இந்த தகவல்கள் யாரும் அறிந்திராத ஒன்று.

    ReplyDelete